முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் பேசிவருகிறார்: பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நெல்லை மாவட்டத்தில் மட்டும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.7.11 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து சரி செய்து வருகிறோம். இதுவரை 16 மாவட்டங்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவதாகவும், இது அவரின் பதவிக்கு ஒவ்வாத செயல் என்றும் குறிப்பிட்ட பீட்டர் அல்போன்ஸ், “தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். தமிழ்நாட்டை வன்முறைக் களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். ஆளுநரும், அண்ணாமலையும் இவ்வாறு நடந்து வருகிறார்கள். ஒன்றிய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது” என்று சந்தேகம் எழுப்பினார்.

மேலும், “50 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம். இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி” என்றும் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

டெல்லியில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jayasheeba

வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்

Vandhana