போதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்

போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா இன்று ஆஜரானார்.

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகைகள் சார்மி, முமைத்கான், ரகுல் பிரீத் சிங் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், புரி ஜெகநாத், நடிகை சார்மி, ரகுல் பிரீத் சிங், ராணா ஆகியோர் அமலாக்கத் துறையில் ஆஜராகி விளக்கம் அளித் தனர். இந்நிலையில் நடிகர் ரவிதேஜா இன்று அதிகாரிகளின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.