முக்கியச் செய்திகள் தமிழகம்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

ஈரோடு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், ஈரோடு மாவட்டம் பெருந் துறை தொகுதிக்கு உட்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் விநியோகம் செய்ய அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
5 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

 

Advertisement:
SHARE

Related posts

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Nandhakumar

புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

Halley karthi