சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும் சவரனுக்கு ரூ.1120 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







