நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பாலோயர்களின் எண்ணிக்கை வியக்கும் அளவில் அதிகரித்து வருகிறது.
கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர், பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இப்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள். இப்போது பாலிவுட்டில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன்‘மிஷன் மஜ்னு’, அமிதாப்பச்சனுடன் ‘குட் பை’ படங்களில் நடிக்கிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உருவாக வாய்ப்பிருக்கிறது.
’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது, அதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். கடந்த வருடம் நேஷனல் க்ரஷ் என்ற பட்டத்தைப் பெற்றவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டி உள்ளது. அதாவது ஒரு கோடியே 94 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். விரைவில் 2 கோடியை தொட்டுவிடுவார் என்கிறார்கள். இதன் மூலம், தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார் ராஷ்மிகா.
அதிக ஃபாலோவர்களை கொண்ட நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோ ரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார், இந்த நேஷனல் க்ரஷ்.