முக்கியச் செய்திகள் தமிழகம்

கின்னிமங்கலம் ஏகநாதர் கோயிலில் மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை கோயிலான கின்னிமங்கலம் ஏகநாதர் கோயிலில் மத்திய, மாநில தொல்லியல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள கின்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகநாதர் கோயிலில் கடந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் பிராமி கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தார். அதில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில் இந்த கோயில் தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை கோயில் என அறியப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கின்னிமங்கலம் கோயில்

பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் தாமாக வழக்கை முன்னெடுத்து தொல்லியல் துறை உரிய ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தொல்லியல் அறிஞர் கே.ராஜன் தலைமையில் மத்திய, மாநில தொல்லியல்துறை உயர் அதிகாரிகள் இந்த கோயிலையும், கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

எல்.ரேணுகாதேவி

பேருந்து நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்

EZHILARASAN D

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

Niruban Chakkaaravarthi