வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் என பாஜகவின் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேசுக்கு இதுவரை நீதிக்கிடைக்கவில்லை, இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசிகளை ஒரு சிலர் எடுத்து கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு கொடுப்பதாக தகவல் வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் அதற்கான ஆதாரத்தைக் திரட்டி வருவதாக கூறிய அவர், இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தகுந்த முறையில் வேகமாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என தெரிவித்த வானதி சீனிவாசன், கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எனவே வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி இம்மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் எனவும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார்.







