முக்கியச் செய்திகள் விளையாட்டு

’என்கிட்ட கேட்காமலேயே அறிவிச்சா எப்படி?’- ரஷித் கான் ராஜினாமா

ஆப்கானிஸ்தான் டி-20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து, ரஷித் கான் விலகியுள் ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 14-ம்
தேதி வரை நடைபெறும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங் கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வீரர்களின் பட்டியலை அறிவித்தது.

கேப்டனாக ரஷித் கான் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த தொடருக்கான ஆப்கானிஸ் தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார்.

அணி அறிவிக்கப்படும் போது கேப்டன் என்ற முறையில் தேர்வுக்குழுவினர் என்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாமலேயே அணி, தேர்வு செய்யப் பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக முகமது நபி நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

’மனைவியாக ஏற்க முடியாது’ என்றதால் தற்கொலை: பிரபல நடிகரின் மகன் கைது!

Halley karthi

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

Gayathri Venkatesan

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

Ezhilarasan