முக்கியச் செய்திகள் இந்தியா

பவானிபூா் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

பவானிபூா் தொகுதியில் போட்டியிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. திரிணாமூல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்தாலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந் தார். இருந்தும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றதால், 6 மாதங்களில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, மம்தா முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து பவானிபூர் உட்பட 3 தொகுதிகளில் வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் மம்தா, பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்மனு தாக்கல் செய்தார். வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. பாஜக பிரியங்கா டிப்ரே வால், என்பவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் என்பவரையும் வேட்பாளராக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் இந்தியில் விளக்கங்கள்

Web Editor

“வெள்ளை அறிக்கைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை”; அமைச்சர் சுப்பிரமணியன்

Halley Karthik