முக்கியச் செய்திகள் இந்தியா

ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

ஒடிசா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் அரிதான இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் ராஜ்நகர் பகுதியிலுள்ள கனி என்னும் கிராமத்தில் தனது கணவர் உமாகண்ட் பரிடாவுடன் வசித்து வருகிறார் அம்பிகா. இவருக்கு சமீபத்தில் சிசேரியன் மூலம் இரண்டு தலைகள், இரண்டு கால்கள் மற்றும் மூன்று கைகளுடன் கூடிய இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றாக ஒட்டிப் பிறந்துள்ளன. இது இவருக்கு இரண்டாவது குழந்தையாகும். பின்னர் சற்றே வித்தியாசமாகப் பிறந்துள்ள இக்குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கேந்திரபாராவின் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து, “புதிதாகப் பிறந்த ஒரே உடல், மூன்று கைகள் மற்றும் இரண்டு கால்களைப் பகிர்ந்து கொள்ளும் இரட்டை சகோதரிகளான இந்த குழந்தை, இரண்டு வாயால் சாப்பிட்டு இரண்டு மூக்குகளால் சுவாசிக்கின்றன. மேலும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக உள்ளது, ஆனால் நாங்கள் குழந்தையை சிறப்பு சிகிச்சைக்காக கட்டாக்கின் சர்தார் வல்லபாய் பட்டேல் முதுகலை பட்டதாரி இன்ஸ்டிடியூட் ஆப் பீடியாட்ரிக்ஸ் (சிஷு பவன்)-க்கு மாற்றியுள்ளோம்” என்று கேந்திரபாராவின் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டெபாஷிஸ் சாஹூ கூறினார்.

இந்நிலையில் விவசாயம் செய்து பிழைக்கும் அக்குழந்தையின் தந்தை உமாகண்ட் பரிடா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உணவைக்கூட உண்ணமுடியாத நிலைமையில் உள்ளோம். இந்நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சை எங்களுக்கு சாத்தியமற்ற விவகாரம். எனவே எங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Advertisement:

Related posts

குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Karthick

கொரோனாவால் தந்தையை இழந்த 18 வயது மாணவன்: உதவிக்கரம் நீட்டிய சல்மான் கான்!

Jeba

உலகளவில் முடங்கிய ட்விட்டர் இணையதளம்!

எல்.ரேணுகாதேவி