முக்கியச் செய்திகள் விளையாட்டு

வீரேந்திர சேவாக்கை கவர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்!

நடப்பு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய சேத்தன் சகாரியாவின் பந்து வீச்சு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்கை ஆச்சர்யப்படுத்தியது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, கிறிஸ்கெய்ல் ஆகியோர் ராஜஸ்தான் அணி வீர்ரகளின் பந்து வீச்சை மைதானத்தின் நாளாபுறமும் சிதறடித்து அதிரடி காட்டினர். இந்தப்போட்டியில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சகாரியா ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமானார். தனது அறிமுகப்போட்டியிலேயே சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து மாயங்க் அகர்வால் (12), ஜெய் ரிச்சர்ட்சோன் (0) இறுதி ஓவரில் கே.எல்.ராகுல் (91), ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இவரது பந்துவீச்சை பார்த்து ஆச்சர்ப்பட்ட முன்னாள் இந்திய வீர்ர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சேதன் சகாரியாவின் சகோதரர் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் சையது முஷ்டாக் அலி டிராபி போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தால் சகோதரன் இறந்த செய்தியை அவரது பெற்றோர் சகாரியாவிடம் சொல்லவில்லை. சகாரியாவிற்கு கிரிக்கெட்டின் மீதுள்ள தாகத்தை அவரது பெற்றோர் புரிந்து வைத்திருந்தனர்.

ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருவரும் உங்களது பந்துகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிக்கு அடிப்பதை பார்த்து நீங்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது என்று கூறுவார்கள். நீங்கள் வெற்றி பெறாத வரை, நீங்கள் கற்றுக் கொள்ளவும் விக்கெட்டுகளை எடுக்கவும் முடியாது என்ற மனநிலையையே நேற்று சகாரியா வெளிப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன். அவரது பந்துகளில் பல மாறுபாடுகள் இருந்தன. ஒரு சில நோ-பந்துகள் இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார். மாயங்க் அகர்வாலை அவர் வீழ்த்திய விதம் மற்றும் கிறிஸ் கெயிலுக்கு வீசிய பந்து என அவர் முற்றிலும் எனனை ஆச்சரியப்படுத்தினார். என சேவாக் தெரிவித்திருந்தார்

Advertisement:

Related posts

தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது: எல்.முருகன்!

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

Gayathri Venkatesan

பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!

Karthick