நீட் தேர்வுக்கு முழக்கிமிட்ட ராப் பாடகர் அறிவு கைது!

சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட ராப் பாடகர் அறிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவு சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கிமிட்டு போராட்டத்தில் ஈடபட்டார். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ராப் பாடகர் அறிவை போலிசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் தலைமைச் செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாடகர் அறிவு முதலமைச்சர் விஜயை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.