சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான ‘தெருக்குரல்’ அறிவவை கைது செய்த தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.
நாடு முழுவதும் சிஜேபி தலைமையில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், தமிழ்நாடு அரசு பாடகர் அறிவை கைது செய்துள்ளது..
டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகத் போராட எண்ணும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
நீட் தேர்வு முரண்பாடுகள் நிறைந்தது மட்டுமல்ல; ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; மாறாக, அவை செவிமடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




