மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் அசநெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்த  பிரபு என்ற லாரன்ஸ் என்பது தெரியவந்தது. லாரன்ஸ் அப்பகுதியில் டிஜிட்டல் பேனர் கடை வைத்துள்ளார். மேலும் அவருக்கு திருமணமாகி லாவன்யா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

லாரண்ஸ் அங்குள்ள ஏரிக்கரையில் மீன் பிடிக்க சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்திற்கு அரக்கோணம் ஏஎஸ்பி க்ரிஷ் நேரில் சென்று விசாரித்தார். கொலை செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.