சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ’வண்ணாரபேட்டையில’ என்கிற இரண்டாம் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று வெளியானது.
Today’s Paper Ad!😇#MaaveeranTrailerFromTomorrow#Maaveeran #VeerameJeyam pic.twitter.com/PT8iUmycXV
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 1, 2023
தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி, மாவீரன் திரைப்படத்தின் Pre-Release நிகழ்ச்சி சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லரும் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்