திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி நாளன்று ஆனி வார ஆஸ்தானம் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், நவரத்தினக் கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புஷ்ப பல்லக்கில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் அமர்ந்து பக்தி பரவசம் பொங்க கோவிந்தா கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.







