400 பழங்குடியின குடும்பங்களுக்கு உதவிய பிரபல நடிகர்!

இந்த கொரோனா காலகட்டத்தில், 400 பழங்குடியின குடும்பங்களுக்கு நடிகர் ராணா டக்குபதி உதவி புரிந்துள்ளார். தமிழில், பெங்களூரு நாட்கள், பாகுபலி, ஆரம்பம், காடன் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராணா. தெலுங்கு, இந்தி படங்களில்…

இந்த கொரோனா காலகட்டத்தில், 400 பழங்குடியின குடும்பங்களுக்கு நடிகர் ராணா டக்குபதி உதவி புரிந்துள்ளார்.

தமிழில், பெங்களூரு நாட்கள், பாகுபலி, ஆரம்பம், காடன் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராணா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ராணா, இப்போது ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக், விதரபர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் 400 பழங்குடியின மக்களுக்கு உதவி இருக்கிறார் ராணா.

கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஏராளமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் ராணா உதவியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளி, குர்ரம் மதிரா, பாலரெகாடி, அட்டால திம்மபூர், ககன்னாபேட், தண்டா உட்பட பல்வேறு கிராமங்களில், மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் மளிகை மற்றும் மருத்துவப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.