செய்திகள்

ரஷ்யாவில் மின்சார ஸ்கூட்டர்களால் அதிகரித்துள்ள விபத்து; கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

ரஷ்யாவில் மின்சார ஸ்கூட்டர்களின் விபத்து அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, நின்று கொண்டு பயணிக்கும் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது பெரும் வரவேற்பை பெற்றதால், நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவோரால் மாஸ்கோவில் விபத்துகள் அதிகரித்தன. இதையடுத்து, இந்த வகை ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடன் பேசிய அதிகாரிகள், “ஜிபிஎஸ் மூலம் ஸ்கூட்டர்களை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் வாடகை ஸ்கூட்டர்கள் நுழையும் போது, தானாகவே 15 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறையும் வகையில், வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை!

Ezhilarasan

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

பெட்ரோல்-டீசல் நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம்!

Gayathri Venkatesan