ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள்…

ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான நோன்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களால்  தொடங்கப்பட்டது. உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் நோன்பு வைத்துள்ளனர்.சூரிய உதயத்திற்கு முன்னர் எடுத்துக்கொள்ளப்படும் உணவானது ஸஹர் எனவும், அஸ்தமனத்திற்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும்  அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மமக மாநில துணைப் பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத வேறுபாடின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.