விழுப்புரம் அருகே அதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவியின் மீது தாக்குதல் நடத்த முயன்ற திமுகவினரை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள ராமையம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் பணியை திமுக ஊராட்சி மன்ற தலைவி பிரபு லட்சுமி துவங்கி வைத்தார். சாலை போடும் பணிக்காக பூஜை போடப்பட்ட நிலையில். ஊராட்சி நிர்வாக சார்பில் நடைபெறும் பணியினை ஆளுங்கட்சியினர் தான் செய்வோம் என அப்பகுதியில் உள்ள திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ராமையன்பாலையம் திமுக கிளை செயலாளர் சிவசங்கர் மற்றும் கவுன்சிலர் கிருபாநிதி உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய தோடு பெண் ஊராட்சி மன்ற தலைவியையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இச் சம்பவத்தை அடுத்து பெண் ஊராட்சி மன்ற தலைவியை பணி செய்ய விடாமல் , தரக்குறைவாக பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—-கோ. சிவசங்கரன்







