முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது திருச்சி நீதிமன்றம்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது திருச்சி நீதிமன்றம். 2 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முகம்மது சுபைருக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் சம்மன்

Mohan Dass

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா-ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு

Web Editor

ஏ.கே.ராஜன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?

Jeba Arul Robinson