“அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர்” – எடப்பாடி பழனிசாமி…

அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.  மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 

மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக குடும்பத்தோடு திருப்பதி சென்றுள்ளார்.  திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.  தொடர்ந்து திருப்பதி
மலையில் உள்ள வராக சாமி கோயிலுக்கு நேற்று இரவு குடும்பத்துடன் சென்ற அவர்
வராக சாமியை வழிபட்டார்.

இரவு திருப்பதி மலையில் தங்கிய அவர்,  இன்று காலை கோயிலுக்கு சென்று அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.  பின்னர், கோயிலில் இருந்து வெளியே வந்த அவர் ஏழுமலையான் கோயில் எதிரிலிருக்கும் அகிலாண்டம் பகுதிக்கு சென்று தேங்காய் உடைத்து,  கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டார்.  தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,

மனநிறைவு ஏற்படும் வகையில் இன்று ஏழுமலையானை வழிபட்டிருக்கிறேன். அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர்.  யார் விரும்பினாலும் அங்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.  தமிழ்நாடு கோயில்களில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே இருப்பவை தான்.  2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அதிமுக  துவங்கி உள்ளது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.