நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் எற்பட்ட குளறுபடிகளுக்கு பொருப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் டெல்லி போலீசார அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சோனம் வாங்சூக்கை வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றக் கூட்டத்தில் அபிஜித் தீப்கே பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அவர் மீது நீல நிற மைய்யை அடித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு நீலம் தான் என் நிறம் என அபிஜித் தீப்கே பதிலளடி கொடுத்தார்.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத் தக்கது.




