10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடைபெற்றன. இதில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.=அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்ஹ நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டின் ஆடியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கஎட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷெஃபாளி வெர்மா 68 ரன்களும் ஸ்மிரிதி மந்தனா 59 ரன்களும் எடித்தனர். இதனைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 8-வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி உட்படெ பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம்! ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். போட்டித்தொடர் முழுவதும் அவர்களின் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் அபாரமான மன உறுதி ஆகியவை முழுமையாக வெளிப்பட்டன. இந்த வெற்றியானது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை மேலும் விளையாடி ஜொலிக்கத் தூண்டட்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “2026 மகளிர் டி20 ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர் முழுவதும் ஒரு அணியாக அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். அவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக நமது மகள்களுக்கு, ஒரு சிறந்த உத்வேகத்தின் ஊற்றாகத் திகழ்கிறார்கள். அவர்கள் இன்னும் பல எழுச்சியூட்டும் வெற்றி மற்றும் சிறப்பான அத்தியாயங்களை எழுதுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
8-வது மகளிர் ஆசியக் கோப்பைப் பட்டத்தை வென்ற நமது சாம்பியன்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்தொடர் முழுவதும் உங்கள் அசைக்க முடியாத ஆதிக்கத்தால் தேசத்தையே பரவசப்படுத்தி, லட்சக்கணக்கானோருக்கு உத்வேகத்திற்கான பாதையை அமைத்துள்ளீர்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஆஉங்களின் அபாரமான திறமை, உறுதி மற்றும் போராடும் குணம் ஆகியவை உலக அரங்கில் இந்தியப் பெண்களின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. இந்த மகத்தான வெற்றி, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு உத்வேகம் அளித்து, மேலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிவகுக்கட்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவ்வர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், “இத்தொடர் முழுவதும் அவர்களின் தோல்வியற்ற பயணம், சிறப்பான குழுப்பணி மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நாட்டிற்கு அளவற்ற பெருமையைக் கொண்டு வந்துள்ளன. இந்த மகத்தான சாதனை, எண்ணற்ற இளம் இந்தியர்களைப் பெரிய கனவுகளைக் காணவும், விளையாட்டைத் தழுவிக்கொள்ளவும், சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கட்டும். அணிக்கு இன்னும் பல மகத்தான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.




