GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை தங்கம் விலை சற்று உயர்ந்துதது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிற்து. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.