தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் ‘இயக்குநர் சேரன் அணி’ வெற்றி!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் சேரன் அணி வெற்றி பெற்றுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் பாக்கியராஜ் மறைந்ததை தொடர்ந்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட திரைக்கதை எழுத்தளர் சங்கத் தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 21 பொறுப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ என்ற அணியும், இயக்குநர் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் களம் கண்டன.

சங்கத்தின் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில், 483 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் இன்று காலை முதல் நடைபெற்ற வாக்குப்பதிவில் 432 வாக்குகள் பதிவாகின. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவி நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான 432 வாக்குகளில் 279 வாக்குகள் பெற்று இயக்குநர் சேரன் அணி வெற்றிபெற்றது. இயக்குநர் வி.சி.குகநாதன் அணி 155 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. இதன்மூலம் இயக்குநர் சேரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைராகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.