முதலமைச்சர் விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வினாயகர் சதுர்த்தி இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.