பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இணைந்து நடத்தும் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் செல்வம், ”பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 60 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசாங்கம் வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் வழங்க வேண்டும். PFRDA ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒப்பந்த முறையில் நியமிக்க கூடிய அடிமை சட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது நிறைவேற்றப்படவில்லையெனில் வரும் காலங்களில் செப்டம்பர் 23ல்
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தை நோக்கி தர்ணா போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அட்டக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். நிலுவைத் தொகை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர்
ஆர்.பி.சுரேஷ், “2013ல் செப்டம்பர் 3ல் இந்த சட்டம் வந்ததில் இருந்து மத்திய அரசு
ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 2024 க்குள் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். ரயில்வேயும் எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நாடு ஸ்தம்பிக்கும் அளவுக்கு அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும். இந்திய நாடு முழுவதும் இருக்கும் மத்திய , மாநில அரசின் அட்டக் கூலி முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.