சென்னையில் குட்கா கொண்டு வந்ததாக சந்தேகப்பட்டு பேக்கை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு
போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் .
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரண்டாவது கடற்கரை
சாலையில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த
சாலையில் ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்கள் அருகே போலீசார் சென்ற போது அந்த மர்ம நபர்கள் தப்பி
ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் அவர் கொண்டு வந்த பேக்கை
சோதனை செய்தனர்.
போலீசார் முதலில் சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா தான் வைத்துள்ளனரா என்ற சந்தேகத்தில் சோதனை செய்தனர். ஆனால் அதில்
கட்டுக் கட்டாக பணம் இருந்ததை அடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து
சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த சகாபுதின் (57) என்றும் அவர் வைத்திருந்த கணக்கில் இல்லாத 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஹவாலா பணத்தை ஒப்படைத்தனர். சகாபுதினை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இருவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.