முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ராஜ்ய சபா தேர்தல் ; திமுக, அதிமுகவில் மல்லுக்கட்டும் மைனர்கள் !

ஜூன் மாதம் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில்  திமுக மற்றும் அதிமுக சார்பில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என இரு வட்டாரங்களிலும் இப்போதே வட்டமேசை மாநாடுகள் தொடங்கி விட்டன. திமுகவை பொறுத்தவரை பழைய முகங்கள் தங்களுக்கே மீண்டும் சீட் வழங்க வேண்டும் என சித்தரஞ்சன் சாலைக்கு நெருக்கமானவர்கள் மூலம் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டனர். அதிமுகவை பொறுத்தவரை இரண்டு பேர் நிற்க வாய்ப்புள்ள நிலையில், அவற்றில் ஒன்றை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கான மொத்த மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18 ஆகும். இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வைத்துள்ளது. அதில் திமுக உறுப்பினர்கள் 3 பேர், அதிமுக உறுப்பினர்கள் 3 பேருக்கான இடங்களுக்குமான பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. ஆளும் கட்சியான திமுக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும்.

அதில் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோருக்கான பதவிக்காலம் நிறைவடைகின்றது. டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கும் மீண்டும்  வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழக சட்டமன்றத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தங்களுக்கு ஒரு சீட் ஓதுக்க வேண்டும் என காங்கிரஸ் திமுகவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதியுடன் மாநிலங்களவை பதவி காலத்தை நிறைவு செய்யும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அந்த இடம் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக சார்பில் இருவர் தேர்வாகலாம் என்ற நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி, செம்மலை, கோகுல இந்திரா என ஒரு பெரிய பட்டாளமே முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே, இந்த இரண்டில் ஒன்றை பாஜக தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கேட்பதாக தெரிகிறது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானுக்காக அந்த ஒரு சீட்டும் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பாஜக கூட்டணியால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்ற கருத்து மூத்த நிர்வாகிகளிடம் இருப்பதால், இதனை எப்படி கையாளுவது என அதிமுக தலைமை தீவிர யோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ கடைசியில் தங்களுக்கு ஒரு சீட்டை அதிமுக தாரைவார்க்கும் என தாமரை வட்டாரங்கள் ஆணித்தரமாக நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலா.தேவா இக்னேசியஸ் சிரில்

Advertisement:
SHARE

Related posts

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

Arivazhagan CM

இவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !

Halley Karthik

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு!

Ezhilarasan