மாநிலங்களவை தேர்தல் | அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்​து, காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும். அதன் அடிப்​படை​யில், திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்பட்டுள்​ளனர்.

அதி​முக சார்​பில், தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்​புமனுத்​தாக்​கல் தொடங்​கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்​தாக்​கல் செய்​ய​லாம். முதல் நாளில், 2 சுயேச்​சைகள் மனுத்​தாக்​கல் செய்​தனர். அதன்​பின் கடந்த இரு தினங்​களாக யாரும் மனுத்​தாக்​கல் செய்​ய​வில்​லை. இந்​த நிலை​யில், அதி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​கள் நாளை (ஜூன் 6-) வேட்பு மனுக்​களை தாக்​கல்​ செய்​ய உள்​ளதாக அக்கட்சின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19.6.2025 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கட்சிப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி முன்னிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கட்சி வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் I.S. இன்பதுரை, Ex. MLA., செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் ம. தனபால், Ex. MLA., ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, நாளை (6.6.2025 – வெள்ளிக் கிழமை) நண்பகல் 12.45 மணிக்கு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்சிப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின்ன் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.