மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காலியாகும் 6 இடங்களுக்கு 13…

மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காலியாகும் 6 இடங்களுக்கு 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநிலங்களவைக்கு திமுக சார்பில் கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆகிய 6 பேரும், சுயேட்சைகள் 7 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்​ கொள்வதற்கான கடைசி நாள் இன்று என அறிவிக்கப்பட்டது. வாபஸ் பெறுவதற்கான அவகாசம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான சீனிவாசன் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக் காலமும் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதில் 13 வேட்பாளர்களிடம் இருந்து 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக அறிவிக்க.ப்பட்டது. செல்லத்தக்க வேட்புமனுக்களை யாரும் திரும்பப் பெறவில்ல்லை கல்யாணசுந்தரம், கிரிராஜன், சி.வி.சண்முகம், ப.சிதம்பரம், தர்மர், ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.