மெல்லிய காற்றில் இருந்து ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சி வெளியேற்றும் ஜெல் படலத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த ஒரு கிலோகிராம் ஜெல் படலம் பாலைவனக் காற்றில் கூட, ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீரைப் உறிஞ்சி வெளியேற்றும் தன்மையுடையது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மூன்றில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் அந்த எண்ணிக்கை இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒன்று மக்கள்தொகை வளர்ச்சி மற்றொன்று காலநிலை மாற்றம். இதனால்தான் சில விஞ்ஞானிகள் தாகமான எதிர்காலத்தைத் தடுக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கடினமாக உழைக்கிறார்கள். அதன் அடிப்படையாக ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நாம் தண்ணீரை எப்படி வெவ்வேறு வழிகளில், எங்கிருந்து பெறலாம் என்று சிந்தித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு புதிய ஆய்வில், வறண்ட நிலையிலும் கூட ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் குடிநீரை உறிஞ்சி, வளிமண்டலத்தில் இருந்து தண்ணீரைப் பிடிக்கக்கூடிய மலிவான ஜெல் படலத்தை பற்றி அவர்கள் விவரித்துள்ளனர். இந்த ஜெல் படலம் தாவரத்தின் செல் சுவர்களில் காணப்படும் செல்லுலோஸ் என்ற முக்கியப் பொருளிலிருந்தும் மற்றும் கொன்ஜாக் பசை என்ற யானையின் வேர்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இயற்கையான, நீரில் கரையக்கூடிய உணவு நாரில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள தண்ணீரை உறிஞ்சுவதற்கு இந்த இரண்டு கூறுகளும் இணைந்து செயல்படுகின்றன. பசையின் நுண்துளை அமைப்புகள் நீர் மூலக்கூறுகளை ஈர்த்து உள்ளே சிக்க வைத்துக்கொள்ளும். பின்னர், சூடுபடுத்தப்படும் போது, செல்லுலோஸ் கைப்பற்றப்பட்ட தண்ணீரை வெளியேற்றும். இந்த ஜெல் படலத்தை
வெவ்வேறு வடிவங்களிழும் வடிவமைக்கலாம். .
இப்படி ஒரு கிலோகிராம் ஜெல் 24 மணி நேரத்திற்குள், 30% ஈரப்பதம் கொண்ட காற்றில் இருந்து 13 லிட்டர் தண்ணீரை கைப்பற்றி வெளியேற்றும். மேலும் 15% ஈரப்பதத்தில், அதாவது பாலைவனத்தில் 6 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் என்பதை சோதனையின் போது தெரிய வந்ததாக டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றில் இருந்து நீரை இழுக்கும் மற்ற அறுவடை முறைகளைப் போல அல்லாமல், இந்த எளிய ஜெல் படம் மலிவானது, மேலும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையில்லை மற்றும் யாராலும் எளிதாக தயாரிக்க முடியும் தன்மைக்கொண்டது என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொருள் அறிவியல் மற்றும் இயந்திர பொறியியல் பேராசிரியர் குய்ஹுவா யூ கூறியுள்ளார்.
இந்த ஜெல்லை எளிமையாக அமைக்க 2 நிமிடங்கள் ஆகும். பின்னர், அதை உறைய வைத்து உலர்த்த வேண்டும், மேலும் அதை அச்சில் இருந்து தோலுரித்து உடனடியாகப் பயன்படுத்தலாம் என்று யூவின் குழுவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவரும் பணியின் முதன்மை ஆராய்ச்சியாளருமான வெய்சின் குவான் கூறினார்.
– சத்யா விஸ்வநாதன்