தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!

கொரோனா சிகிச்சைக்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) கண்டுபிடித்துள்ள 2DG பவுடர் மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். டி-டியோக்ஸி டி-குளுகோஸ் எனும் 2DG கொரோனா தடுப்பு…

கொரோனா சிகிச்சைக்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) கண்டுபிடித்துள்ள 2DG பவுடர் மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் எனும் 2DG கொரோனா தடுப்பு மருந்தை, டிஆர்டிஓ எனப்படும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. மூன்று கட்ட பரிசோதனைகளில் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 2DG மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 1-தேதி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இந்த மருந்தை டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் 2DG மருந்தை அவர் ஒப்படைத்தார்.


2DG மருந்து, பவுடர் வடிவில் இருப்பதால், கொரோனா நோயாளிகள் தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள், விரைவில் அதிலிருந்து மீள முடியும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.