முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத்தை இன்று தாக்கவுள்ள டவ் தே!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர புயலான டவ் தே,இன்று இரவு குஜராத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, மேற்கு திசையில், 90 கிலோ மீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மகாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில், 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதுடன், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

டவ் தே புயல், இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டவ்-தே புயல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போர்பந்தர் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பாலிகீட்ஸ் புழுக்கள்!

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana

கேள்விக் குறியான பழங்குடியின, பட்டியலின மாணவர்களின் பள்ளிப்படிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Vandhana