மேட்டூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கணவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாக பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த தனபால் என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது. தனபால் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அவரது மனைவி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதேநேரம், மேட்டூர் அரசு மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் தனபாலை சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







