கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஒன்றான பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை இந்தத் தொழிற்சாலையில் செயல்படும் இயந்திரம் திடீரென வெடித்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி, புகை மண்டலமானது. இங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கிக்கொண்டிருந்த நபர்களை வெளியே கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிழிந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும். என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







