வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயலுக்கு முந்தைய கண்காணிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இன்று (நவம்பர் 15) காலை 8.30 மணி நிலவரப்படி, 9.3 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.9 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ளது.

இது இலங்கையின் திருகோணமலையிலிருந்து கிழக்கே 630 கிலோமீட்டர் தொலைவிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து மேற்கு-தென்மேற்கே 690 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 840 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1,010 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூரிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1,130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயலுக்கு முந்தைய கண்காணிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.