தங்கம் விலையானது நாள் தோறும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. திங்கள் கிழமையான நேற்று தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,440-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680க்கும், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







