முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மோசடி செய்த பைனான்சியர் – ரஜினிகாந்த் பட நடிகை புகார்

கடன் வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஜெய தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 1980 ஆண்டு முதல் தமிழில் வெளியான 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களும் நடித்தவர் நடிகை ஜெயதேவி. நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த “பாவத்தின் சம்பளம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜெயதேவி. கமல் நடித்து வெளியான “இதயமலர்” என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரணை கதாநாயகனாகவும், குஷ்புவை கதாநாயகி வைத்து “பவர் ஆப் வுமன்” என்ற திரைப்படத்தை ஆறு கோடி ரூபாய் செலவில் தயாரித்திருக்கிறார். அந்தத் திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. சில பணிகள் முடிக்க வேண்டி இருப்பதால் அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை ஜெயதேவிக்கு கடனாக தேவைப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த சரவணன் மற்றும் சுந்தர் ஆகியோர் மூலமாக ஊட்டியை சேர்ந்த ரகு என்பவர் திரைப்பட பைனான்சியர் எனக்கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.

நடிகை ஜெயதேவிக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தயாராக இருப்பதாகவும், அதற்கு முன்பணமாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்தை கட்ட வேண்டும் என ரகு, ஜெயதேவிடம் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து தனது நண்பர்கள் மூலம் மூலமாக ரெடி செய்து ஜீ பே மூலமாக ரகுவிற்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி இருக்கிறார். ஆனால் ஒரு கோடி ரூபாய் கடனை பெற்று தராமல் பல காரணங்களை கூறி இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் வெறுத்துப்போன ஜெயதேவி இறுதியில் தான் கொடுத்த பணத்தையாவது திருப்பித் தாருங்கள் என கேட்டுள்ளார்.

தான் வாங்கிய பணத்தையும் தரமுடியாது. முடிந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து கொள்ளுங்கள். தனக்கு மிகப்பெரிய பின்புலம் இருப்பதாகவும், மீறி தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாகவும் ராகு மிரட்டியுள்ளார். இதையடுத்து மிகுந்த பண நெருக்கடியில் இருக்கும் தனக்கு, ரகுவிடம் கொடுத்த பணத்தை திருப்பி பெற்று தர கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இவரது புகார் மனுவை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி

Halley Karthik

சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை… 2 பெண்கள் கைது!

Saravana

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!

Halley Karthik