டெல்லி பயண சர்ச்சை; இபிஎஸ்ஸை சந்தித்த ராஜேந்திரபாலாஜி

டெல்லி பயணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 8ம் தேதி திடீரென டெல்லி சென்றார்.…

டெல்லி பயணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 8ம் தேதி திடீரென டெல்லி சென்றார். தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளின் மீது கவனம் செலுத்தி இருக்கிறது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.

டெல்லி சென்றுள்ள அவர், பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைய போவதாகவும் யூகங்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ராஜேந்திரபாலாஜி அதிமுகவில்தான் உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு கட்சியில் இணைய மாட்டார்” என்று உறுதிபட தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சென்னையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.