முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு பட்ஜெட்: பேரவையில் இன்று தாக்கல்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

வழக்கமாக சட்டமன்றம் தொடங்கிய முதல் நாள் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த முறை முன்னதாகவே சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்தது. கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார்.

அந்தவகையில், தமிழ்நாடு பட்ஜெட், காகிதமில்லா பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள பேரவை நிகழ்வுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். கடந்த கால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிலையில் பி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நாளை பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
SHARE

Related posts

12ம் வகுப்பு தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு : அன்பில் மகேஷ்

Halley Karthik

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு: காவல் துறை

Ezhilarasan

மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ்!

Jayapriya