75வது ஆண்டு சுதந்திர தினவிழா; டெல்லியில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.                   …

ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                            டெல்லி போலீசாருக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்த மின்னஞ்சலில் டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விமானநிலையத்தில் நடைபெற்ற சோதனையில் மிரட்டல் கடிதம் புரளி என்று தெரியவந்தது. எனினும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பிரவுசிங் சென்டர்களிலும் அடையாளம் தெரியாத நபர்களை அனுமதிக் கூடாது என்றும், பிரவுசிங் சென்டர்களுக்கு வருவோரிடம் முகவரி சான்று பெற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா என்று சோதிக்கும்படியும் டெல்லி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.