12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? தலைமைச் செயலாளர் ஆலோசனை!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில் இருந்து…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

தமிழகத்திலும் ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்திருந்தது. அதேநேரத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வை நடத்துவதா அல்லது தேர்வுகளை ஒத்திவைப்பதாக என தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு நடைபெற்ற ஆலோசனையில், தேர்வை நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.