சாலைகள் பெயர் மாற்றம்; தலைமைச் செயலாளரிடம் திமுக புகார்!

சாலைகளுக்கு பழைய பெயர்களையே மாற்றம் செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி, இளங்கோவன் ஆகியோர் இன்று தலைமைச் செயலாளரை சந்தித்தனர். ஈவேரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மனு அளித்தனர். அதில், தேவைப்பட்டால்…

சாலைகளுக்கு பழைய பெயர்களையே மாற்றம் செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி, இளங்கோவன் ஆகியோர் இன்று தலைமைச் செயலாளரை சந்தித்தனர். ஈவேரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மனு அளித்தனர். அதில், தேவைப்பட்டால் மத்திய அரசு உட்பட, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று,  சாலைகளுக்குப் பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,  “அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இரண்டு சாலைகளுக்கும் கருணாநிதி பெயர் சூட்டினார். ஈவேரா பெரியார் சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார். சில தினங்களுக்கு முன்பு எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்துள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார். 

இந்த பெயர் மாற்றத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனத்தை பதிவு செய்தார். இன்று அவரது சார்பில் பெயர் மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் என்ற அவர், மூன்று மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை கொண்ட இந்த சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்ய காரணம் என்ன? யாரை திருப்திபடுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.