சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் கொரோனா பாதிப்பை சாமாளிக்க கூடுதல் படுக்கைகளுடன் 14 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4,500 படுக்கைகள், அண்ணா பல்கலைகழகத்தில் ஆயிரத்து 500 படுக்கைகள் என சென்னை முழுவதும் 12 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.