ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ₹ 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே…

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ₹ 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே தனியார் சந்தை செயல்பட்டு
வருகிறது. இந்த சந்தையின் 35 வது கடையில் சிகாமணி என்பவர் மாம்பழம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாங்காய்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து இவர் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் ராஜபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மீது தெளிப்பான் கொண்டு ரசாயனம் தெளிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து ரசாயனம் தெளிக்கப்பட்ட சுமார் ₹. 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் நகராட்சி குப்பை
வண்டியில் ஏற்றி உரக்கிடங்கில் வைத்து அழித்தனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.