முக்கியச் செய்திகள் உலகம்

ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?

இலங்கையில் மக்கள் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல்  ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பை கண்டு அஞ்சிய ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த பலர் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். மஹிந்தாவின் மூத்தமகன் நமல்  குடும்பத்தினர் கடந்த மாதமே வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர்.அவர்களின் பயணத்திட்டம் இதுவரை வெளியாகவில்லை. மஹிந்தாவின் சகோதரி நிருபமா ராஜபக்சே, நடேசன் தம்பதி, சென்ற மாதம் துபாய் சென்றுவிட்டதாக தெரிகிறது.நேற்று மஹிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராஜபக்சேவும் விரைவில் வெளிநாட்டிற்கு செல்வார் எனத்தெரிகிறது. அவர் இலங்கையில் இருந்து தப்பிவிடாமல்,இருக்க அந்நாட்டு மக்கள் விமானநிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்‌சே பதவி விலகிய பின்னர் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வருகின்றன. மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌சே இன்று தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.

 

 

Advertisement:
SHARE

Related posts

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

Ezhilarasan

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

Vandhana

கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர் – மதுரையில் தொடக்கம்

Saravana Kumar