கோடையில் குளிர்ந்த சென்னை; அதிகாலை முதல் மழை

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையின்  முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை | News7 Tamil
திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் காலை முதல்
நிறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த இடியுடன் காற்று வீசி பெய்த மழையால் செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் ஆங்காங்கே சாலையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் சாய்தது.

புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பரவலாக சாரல் மழை
பெய்தது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்
சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதுபோலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.