முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் – மேயர் பிரியா விளக்கம்

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 30% முடிந்துள்ளது என சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் நடைபெற்று வரும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, சென்னையில் சிங்காரா சென்னை திட்டத்தின் கீழ் ரூபாய் 250 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். தமிழ்நாடு சிறப்பு நிதியுதவி மூலம் 291 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கம் ராஜமன்னார் சாலை, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம் என்றும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என கூறினார்.

 

மேலும் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்ற அவர், தற்போது வரை 30% பணிகள் முடிவுற்றுள்ளது என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் 30 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் ரூ.400 கோடி மதிப்பில் சாலைகள் போடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் என்றும் கூறினார். அதன்படி சேதமடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து!

Arivazhagan CM

82 வயது பெண்மணியுடன் விண்வெளிக்கு பயணித்த ஜெப் பெசோஸ்

Halley Karthik

2 நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு…. வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி!

Nandhakumar